இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக பூமியாகவும், மத நல்லிணக்கத்தின் திருத்தலமாகவும் விளங்கும் கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா, இன்று (15) மாலை 6.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கொடிக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டு, ஆலய வளாகத்திலுள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற பால்குடிபாவா பள்ளிவாசலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நான்கு முக்கிய சமயத் தலைவர்களின் ஆசியுரைகளுடன், பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ‘அரோகரா’ பக்தி கோஷ முழக்கங்களுக்கு மத்தியில் புனிதக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ‘அரோகரா’ கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் கொடியேற்றம் | Flag Hoisting At The Kataragama Kandan Temple

இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த பெரும் திரளான பக்தர்கள் இந்த நிகழ்வில் பக்திப் பரவசத்துடன் கலந்துகொண்டனர்.

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், புனித பாதயாத்திரையை மேற்கொண்ட பக்தர்களில் முதலாவது குழுவினர் இன்று அதிகாலை கதிர்காமத்தை வந்தடைந்தனர்.

கடந்த 10 ஆம் திகதி முதல் உகந்தை மற்றும் குமண தேசிய பூங்கா ஊடாக கதிர்காமம் வரையான காட்டுப்பாதை பக்தர்களின் வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்டிருந்தது.

ஆடிவேல் விழாவின் முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க திருவீதி உலா இன்று இரவு நடைபெறவுள்ளது.

தொடர்ந்து 15 நாட்கள் பக்திபூர்வமாக நடைபெறவுள்ள இந்த திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான தீர்த்தோற்சவம், எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை புனித மாணிக்க கங்கையில் நடைபெற்று, இந்த ஆண்டுக்கான ஆடிவேல் விழா நிறைவுபெறவுள்ளது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments