ஈரான் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை இலக்குவைத்ததாகச் சுட்டிக்காட்டி இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பாரசீக வளைகுடாவில் உள்ள அண்டை அரபு நாடுகள் மீது தான் நடத்திய தாக்குதல்கள் தற்காப்பு நடவடிக்கைகள் என்றும் அது நியாயப்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் வசதிகள்

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஈரானிய அமைச்சகம் அமெரிக்கா மீது, குறிப்பாகப் பொதுமக்களின் வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை இலக்குவைத்ததன் மூலம் பல போர்க்குற்றங்களை புரிந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

வெடித்த புதிய மோதல்...! அமெரிக்கா மீது ஈரான் போர்க்குற்றச்சாட்டு | Iran Accuses Us Of Committing War Crimes

Advertisement

இத்தகைய தாக்குதல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படை விதிகளை அப்பட்டமாக மீறுவதாகும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அண்டை நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்களை நியாயப்படுத்திய அந்த அறிக்கை, அவை தற்காப்புக்கானவை என்றும் சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் 51ஆவது பிரிவின் கீழ் ஈரானின் இயல்பான மற்றும் சட்டபூர்வமான தற்காப்பு உரிமைக்கு இணங்க அமைந்தவை என்றும் விவரித்துள்ளது

குடியிருப்பு கட்டிடம் 

இருப்பினும், பல்வேறு வளைகுடா நாடுகளில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள், விடுதிகள், சிவில் விமான நிலையங்கள் மற்றும் முக்கிய எரிசக்தி மற்றும் நீர் வசதிகள் மீது ஈரான் இதற்கு முன்னர் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் குறித்தோ அல்லது சமீபத்தில் வணிகக் கப்பல்கள் மீது நடத்திய தாக்குதல்கள் குறித்தோ அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

குறிப்பாக, ஜூன் 3 அன்று குவைத் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தைக் கடுமையாகச் சேதப்படுத்தி ஒருவரைக் கொன்று, 60 இற்கும் மேற்பட்டோரைக் காயப்படுத்திய தாக்குதல் மற்றும் கடந்த மாத இறுதியில் பஹ்ரைனின் குடியிருப்பு கட்டிடம் ஒன்றுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக அந்நாட்டு உள்நாட்டு அமைச்சகம் தெரிவித்த தாக்குதல் ஆகியவை குறித்தும் அதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Advertisement

வெடித்த புதிய மோதல்...! அமெரிக்கா மீது ஈரான் போர்க்குற்றச்சாட்டு | Iran Accuses Us Of Committing War Crimes

அமெரிக்கா செய்ததாகத் தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்களுக்கு உதாரணமாக ஈராக் எல்லையோர டெஹ்லோரான் பகுதியில் உள்ள கனிம நீர் உற்பத்தி நிலையம் மீது புதன்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களையும், செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை தென்கிழக்கு ஈரானின் சபஹார் (Chabahar) பகுதியில் உள்ள கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் ஈரானிய வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த வாரத்தில் மட்டும் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களில் இத்தகைய பல ஒத்த தாக்குதல்களும் அடங்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments