பேச்சுவார்த்தைகள் மூலம் ஈரான் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு நாடுகளுக்கிடையிலான மோதல் உலகளாவிய எரிசக்தி வழித்தடங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், ஈரான் காலதாமதம் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

ஈரான் ஆதரவு யேமன் ஹவுதிகளின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, ரூபியோ இந்த கருத்தை வெளியிட்டு்ள்ளார்

மார்கோ ரூபியோ கருத்து

ஆசியாவிற்கு சவூதி கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற மூன்று எண்ணெய் கப்பல்கள் செங்கடலில் தங்கள் பாதையை மாற்றிக்கொண்ட ஒரு நாள் கழித்து, வெளிவந்த மார்க்கோ ரூபியோவின் இந்த கருத்து மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் மோதலுக்கு முக்கிய மாற்றீடாக பார்க்கப்படுகிறது. 

ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு தயார்! ஹோர்மோஸ் பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்காவின் செய்தி | Rubio Claims Us Still Open To Iran Negotiations

செங்கடலில் உள்ள கடற்கரையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹவுதிகள், திங்களன்று சவூதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை அறிவித்தனர்.

Advertisement

இதன் மூலம் , பெப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுடன் தொடங்கி, வளைகுடா முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற போரில், ஒரு புதிய முனையை உருவாக்கும் சாத்தியக்கூறு ஏற்பட்டுள்ளது.

முடங்கியுள்ள கப்பல் போக்குவரத்து

வளைகுடாவிலிருந்து வெளியே செல்லும் ஹோர்முஸ் நிரிணை வழியாக கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் ஏற்கனவே அச்சுறுத்தல் விடுத்து வருவதால், தினமும் மில்லியன் கணக்கான பீப்பாய் சவூதி எண்ணெய் வெளியேறுவதற்கான முக்கிய மாற்றுப் பாதையாக செங்கடல் விளங்குகிறது.

Advertisement

ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு தயார்! ஹோர்மோஸ் பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்காவின் செய்தி | Rubio Claims Us Still Open To Iran Negotiations

முன்னதாக ஏப்ரல் மாதம் கையெழுத்தான போர் நிறுத்தத்திற்குப் பதிலாக, ஜூன் மாதம் அமெரிக்காவும் ஈரானும் கையெழுத்திட்ட இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் காப்பாற்றும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 10 நாள் போர் நிறுத்தத்திற்கான ஒரு முன்மொழிவை மத்தியஸ்தர்களிடமிருந்து ஈரான் பெற்றுள்ளதாக அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார். 

மேலும் ராஜதந்திரம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கான மற்றொரு அறிகுறியாக, ஈரானின் உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மொமேனி, மத்தியஸ்த நாடான பாகிஸ்தானுக்கு விஜயம் செய்து, தனது முயற்சிகளைத் தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

இவ்வாறான பின்னணியில் தற்போது மார்க்கோ ரூபியோவின் கருத்துக்கள் மத்தியகிழக்கு மோதலுக்கு மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments