சுவிட்சர்லாந்தில் இலங்கையில் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் தலைநகரான பேர்ண் (Bern) நகரில் உணர்வுபூர்வமாக இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் தமிழ் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நினைவேந்தல் 

1983 ஜூலை கலவரத்தில் உயிரிழந்த தமிழ் மக்களுக்குச் சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் பெருமளவில் திரண்டு இந்த நினைவேந்தலில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments