வெளிநாடொன்றில் தற்கொலை தாக்குதல்! 14 பேர் படுகொலை – பலர் காயம் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு வெளியே நடந்த தற்கொலைத் தாக்குதலில் சுமார் 14 பேர் கொல்லப்பட்டுள்ளாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வன்முறை அதிகரிப்பிற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கூட்டத்தை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல் நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகே காவல்துறையினர் அவரைச் சோதிக்க முயன்றபோது, சந்தேகநபர் தனது வெடிபொருட்களை வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது.
பலர் கவலைக்கிடம்
இந்த நிலையில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்து சோதனைகளை முடக்கி விட்டுள்ளதாக தெரியவருகிறது.

Advertisement
இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த 22 பேர் அருகிலுள்ள வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
