பாசிக்குடா கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் – பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்

மட்டக்களப்பு – பாசிக்குடா கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று (17.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரையொதுங்கிய சடலம்

குறித்த நபர் கடற்றொழிலுக்குச் சென்றிருந்த வேளையில் கடலில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சடலம் கரையொதுங்கியதை அவதானித்த அப்பகுதி மக்கள், இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பாசிக்குடா பொலிஸார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். எனினும், உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாசிக்குடா பொலிஸார் மேற்கொண்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments