இதையும் உன் நாளேட்டில்

குறித்து வை.

உன் லாண்டிங் கிராப்ற் லாண்டின் கரையில் கை கொடுப்பார் யாருமின்றி தனியாகக் கிடக்கிறது.

ரஷ்ய நாட்டோடு நாலு கப்பலுக்காய் ஒப்பந்தம் செய்தாய்.

உண்மையில் நீ பாவம்!

ஏன் தெரியுமா?

நீ ஒப்பந்தம் செய்து அழைத்து வரும் கப்பலை

கவர்ந்து செல்ல இங்கு பல நித்திகள் தயாராய் நிற்கின்றனர்.

இந்து சமுத்திரமே !
நீ இரும்புக் கடை போட திட்டமிட்டிக்கிறாய் போல.
அதுதான் புலிகள் உனக்கு- எதிரியின் கப்பல்களைத் தானம் செய்கிறார்களாக்கும்.

அன்று அந்த
அதிகாலைப் பொழுது
இரவுக்கு முடிவு காண
விரைகின்றாள்
பெண் ஒருத்தி…..

கடலுக்கு அடியிலே
சுழியோடிச் செல்கின்றாள்.
கரையினில் கப்பலின்
அடிகாண விரைகின்றாள்…..

இன்பமான வாழ்வுக்கு கரை சேரும் வயதிலிவள் உயிரெனும் ஆயுதத்தால்
அரக்கரை அழிப்பதற்கு கடலோடிச் செல்கின்றாள்…..

இளமையின் உணர்வுக்குக் கட்டுக்கள் பல போட்டு இளஞ் சந்ததியின் வாழ்வுக்காய் கட்டளைக் கப்பலையே இவள் நாடிச் செல்கின்றாள்…..m

காங்கேசன்துறை அன்று கதி கலங்கி நின்றவேளை .
நாம் மட்டும் பெருமையோடு உன் வரவைப் பார்த்திருந்தோம்.
நீ திரும்பி வரவில்லை. உன் இலட்சியத்தின் எதிரொலிதான் எமை வந்து சேர்ந்ததுவே…..

இரவொன்றின் முடிவுகாண விரைந்தவளே அங்கயற்கண்ணி – பெண் கரும்புலிகள் வரிசையிலே முதலிடம் பிடித்தவளே.
உன் வழியில் செல்வதற்கு
காத்து நிற்போம் ……

உறுதியுடன் உன் பாதையில் பயணம் செய்வோம் விடியலைத்தான் தேடிடுவோம்…..

-மேஜர் கண்ணகி.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments