கிளிநொச்சி – அறிவியல் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவையில் இன்று (26) நடந்த விபத்தில் 17 வயதான மாணவி ஒருவர் பரிதாபகரமாக உ**யி**ரிழந்துள்ளார்.

கிளிநொச்சியை செல்வாநகர்ப் பகுதியைச் சேர்ந்த தினேஸ்குமார் அக்யசா (வயது-17) என்பவரே குறித்த சம்பவத்தில் உ**யி**ரிழந்தவராவார்.

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த ரயில், கடவையை கடக்க முற்பட்ட வெகனர் காரை மோதித்தள்ளியுள்ளது.

இந்த விபத்தில் காருக்குள் இருந்த 17 வயதுடைய குறித்த மாணவி சம்பவ இடத்திலேயே உ**யி**ரிழந்துள்ளார்.

மேலும், விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த புகையிரதக் கடவையில் கடந்த சில நாட்களாக சமிக்ஞை விளக்குகள் முறையாக இயங்கவில்லை எனவும், விபத்து நடந்த வேளையிலும் சமிக்ஞை விளக்குகள் சீராக இயங்கவில்லை எனவும் அப்பகுதிப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கிளிநொச்சி – இந்துக்கல்லூரி A/L 2028 மாணவியின் இந்த பிரிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

➡➡➡பொதுமக்களே.. சற்று இதையும் கவனியுங்கள்..

மிக்ஞை விளக்குகள் அணையாவிட்டாலும் அல்லது பச்சையாகத் தெரிந்தாலும், புகையிரதக் கடவையைக் கடப்பதற்கு முன் வாகனத்தை நிறுத்தி இருபுறமும் புகையிரதம் வருகிறதா என்பதை நேரில் பார்த்து உறுதி செய்ய வேண்டும்.

மின்சாரத் தடை அல்லது பராமரிப்புக் குறைபாடுகளால் சமிக்ஞை விளக்குகள் எந்த நேரத்திலும் செயலிழக்கக் கூடும் என்பதால் “நில், கவனி, செவிமடு” (Stop, Look, Listen) என்ற விதியைக் கண்டிப்புடன் பின்பற்றுங்கள்.

ஏர்-கண்டிஷன் செய்யப்பட்ட கார்களில் பயணிக்கும் போது ரயிலின் சத்தமும் ஒலிப்பான்களும் (Horns) உள்ளே கேட்காது.

புகையிரதக் கடவைகளை நெருங்கும் போது காரின் ஜன்னல் கண்ணாடிகளைச் சிறிதளவு இறக்கி, இசை அமைப்புகளை நிறுத்தி, ரயிலின் ஒலிப்பான் சத்தம் கேட்கிறதா என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.

 3. அதிகாரிகள் மற்றும் பராமரிப்பாளர்களின் அவசரக் கவனம்:

🛑

மக்கள் நடமாட்டம் மற்றும் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள் அதிகம் பயணிக்கும் அறிவியல் நகர் போன்ற முக்கிய பகுதிகளில் உள்ள புகையிரதக் கடவைகளின் சமிக்ஞை விளக்குகளை அதிகாரிகள் உடனடியாகச் சீரமைக்க வேண்டும்.

மகளை இழந்து துடிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்..

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments