பாடசாலை மாணவன் அதிகாலைவேளை குத்திக்கொலை,

எரெபொல பகுதியில் இன்று(30) அதிகாலை சுமார் 12.20 மணியளவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த அந்த மாணவன் நேற்று முன்தினம், எரெபொல பாடசாலைக்கு அருகில் தனது நண்பனுடன் உரையாடிக் கொண்டிருந்த காணொளி தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞனுடன் வாக்குவாதம் செய்துள்ளான்.

இன்று அதிகாலைவேளை தாக்குதல்

பின்னர், இந்த தகராறு தீவிரமடைந்த நிலையில், இரவில் மாணவனின் வீட்டிற்கு அருகே இரு தரப்பினரும் மீண்டும் மோதிக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கத்திக்குத்து காயங்களால் படுகாயமடைந்த அந்த மாணவன், எஹெலியகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தான். சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் தற்போது அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை எஹெலியகொட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments