யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, அயலவர்கள் கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் வீட்டிலிருந்து சடலத்தை மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் ஓரிரு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட வைத்திய பரிசோதனைகளின் பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் உறுதியாகத் தெரிவிக்க முடியும் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments