திருமணமாகி ஒரு வருடம் ;மனைவியின் தலையை வெட்டி பிரிட்ஜில் வைத்த கணவன்; ஷாக்காகி நின்ற பொலிஸார்! அசாம் மாநிலம் கவுகாத்தியில் 25 வயதான இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது… கொலை செய்ததைவிட, கொலைக்கு பிறகு நடந்த பயங்கரம்தான், அதற்கு மேல் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரியாவும் ராமானுஜ் கோஸ்வாமியும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், பின்னர் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணமாகி ஒரு வருடம் ;மனைவியின் தலையை வெட்டி பிரிட்ஜில் வைத்த கணவன்; ஷாக்காகி நின்ற பொலிஸார்! | Husband Beheads Wife Head In The Fridge Assam

திருமணமாகி  ஒரு வருடம்

கடந்த செப்டம்பர் 3-ம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு விபரீதமாகி, ராமானுஜ் தனது மனைவியை கொலை செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். சம்பவத்துக்குப் பிறகு வீட்டை பூட்டிவிட்டு அவர் தப்பிச் சென்றதாகவும், அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் வீட்டை சோதனை செய்தபோது கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

விசாரணையில், ரியாவின் உடல் வீட்டில் கண்டெடுக்கப்பட்டதுடன், அவரது தலையும் வீட்டில் இருந்த ஃபிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ராமானுஜ் பின்னர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

போலீசாரிடம் அவர் அளித்ததாக வாக்குமூலத்தில், தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக சந்தேகித்ததால்தான் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது , தனது மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததாக அவர் சந்தேகிக்கும் அந்த நபரையும் கொலை செய்வேன் என்று ராமானுஜ் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை பொலிஸாருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments