யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், தவறான முடிவெடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் வைத்தியசாலையில் குறித்த மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விரிவுரையாளரின் முறையற்ற நடத்தையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தவறான முடிவெடுத்து ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்லூரியின் மன்றம் 

இச்சம்பவம் குறித்து குறித்த கல்லூரின் சக மாணவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

குறித்த மாணவி கல்லூரியின் மன்றம் ஒன்றில் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

இதன்போது, மன்றத்தின் தலைவரின் வழிகாட்டலுக்கு அமைய, வேறொரு மன்றத்திலிருந்து பொருள் ஒன்றை எடுத்துப் பயன்படுத்துவதற்காக அனுமதி கடிதம் கோரி சம்பந்தப்பட்ட விரிவுரையாளரை அணுகியுள்ளார்.

விரிவுரையாளர் இழிவுபடுத்தியதால் மனவுளைச்சல்...! மாணவி எடுத்த விபரீத முடிவு | Jaffna Student Hospitalized After Lecturer Abuse

அச்சமயத்தில், குறித்த விரிவுரையாளர் மாணவியை மிகத் தகாத வார்த்தைகளால் திட்டி, கடுமையான முறையில் இழிவுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்துக் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், நிர்வாகத் தரப்பிலிருந்து எவ்விதப் பொருத்தமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறது.

நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் விரிவுரையாளரின் அநாகரீகமான பேச்சால் மன உளைச்சலுக்கு ஆளான அம்மாணவி, இறுதியில் இத்தகைய தவறான முடிவை எடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments