வெடுக்குநாறிமலைக்கு சென்ற பௌத்த பிக்கு தலைமையிலான குழு : குவிக்கப்பட்டுள்ள காவல்துறை – வெடுக்குநாறிமலைக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஆலயத்திற்கு செல்லும் சைவ பக்தர்களுக்கு காவல்துறையினர் இடையூறை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இன்று (12) காலை அப்பகுதிக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்காகச் சென்றிருந்தனர்.
காவல்துறையினர் இடையூறு
அதேநேரம் அப்பகுதியில் சைவ மக்களும் வழிபாடுகளுக்குத் சென்றிருந்த நிலையில் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

