யாழ்ப்பாணம் – தென்மராட்சியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாயான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மீசாலை – புத்தூர் சந்தி பகுதியில் இன்று (06) செவ்வாய்க்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் குறிப்பிடப்படுகின்றது.

Advertisement
அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் 36 வயதான சோபிதா என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்தவராவார்
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.சோபிதா வரதன் அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி!
#இன்றைய_தினம் இடம்பெற்ற #வீதிவிபத்தில், வடக்கு மாகாண சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றிய திருமதி சோபிதா வரதன் அவர்கள், மீசாலை–புத்தூர் சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் அகால மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தென்மராட்சியின் சிறந்த ஓவியக் கலைஞராகவும், தனது கைவண்ணத்தால் பல அழகிய ஓவியங்களைப் படைத்தவராகவும் அறியப்பட்ட சோபி அக்காவின் இழப்பு, கலைத்துறைக்கும் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவர் வரைந்த ஓவியங்கள் என்றும் பேசும்…
அவர் விட்டுச் சென்ற நினைவுகள் என்றும் வாழும்…
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன், அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆழ்ந்த அஞ்சலிகள் சோபி அக்கா!
முகநூல் நன்பர்கள்


