அடுத்தடுத்து தென்னிலங்கையை அதிர வைக்கும் துப்பாக்கிச் சூடுபுதிய இணைப்பு : மொரட்டுவை ஹோட்டல் உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக வந்தவர்களாலேயே இச்சம்பவமும் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொரட்டுவை ஹோட்டல் உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் காரில் தப்பிச் செல்லும் போது, ​​வாகனத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக பிலியந்தலை, சுவரபொல பகுதியில் கார் பழுதடைந்துள்ளது.

இதன்போது அவர்கள் வானத்தை நோக்கிச் சுட்டுவிட்டு, அருகில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிலியந்தலை, சுவராபொல பகுதியில் காரில் வந்த குழுவினர், மோட்டார் சைக்கிள் ஒன்றை வழிமறித்து வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்களோ பாதிப்புகளோ ஏற்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மொரட்டுவையில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு ; ஹோட்டல் உரிமையாளர் உயிரிழப்பு

புதிய இணைப்பு : மொரட்டுவை – சொய்சாபுர பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் உயிரிழந்தார்.

மொரட்டுவை – சொய்சாபுர பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (20) இரவு 8.20 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி

கடையொன்றில் இருந்த நபர் ஒருவரை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் அக்கடையின் உரிமையாளர் எனத் தெரியவருகிறது.இவர் முஸ்லியம் என்பதும் குறிப்பிடத்தக்கது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments