மக்கள் விடுதலை முன்னணியிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்கக் கொண்டு வரப்பட்ட PTAஐ நீக்கிவிட்டு, PSTA என்ற புதியதொரு சட்டமூலத்தை உருவாக்கி, அநுர அரசாங்கம் தங்களை யாரும் நெருங்காதவாறு காத்துக்கொள்கிறார்கள் என மலையக அரசியல் அரங்கம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம் திலகராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

லங்காசிறி ஊடகம் வழங்கும் “நேருக்கு நேர்” நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மலையக மக்களுக்கான சம்பளத்தை 200 ரூபாயாக உயர்த்துவதாகக் கூறி, அவர்களுக்கு மற்றுமொரு நெருக்கடியை தேசிய மக்கள் சக்தி என தற்போது அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி கொடுத்து வருகிறார்கள்.

 அநுரவின் அரசியல் நகர்வுகள்

சிங்கள மக்கள் இருக்கும் இடங்களுக்குத் தேடிப்போய் உதவி செய்யும் ஜனாதிபதி, மலையக மக்கள் வாழும் பகுதிகள் எவ்வாறு இருக்கும் என்பதைக்கூடக் கண்டறிய முயற்சி செய்யவில்லை.

ஒரு காலத்தில் நாட்டை அச்சுறுத்தலுக்குள்ளாக்கிய மக்கள் விடுதலை முன்னணி, தற்போது PSTA எனும் சட்டமூலத்தை உருவாக்கி, தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்வதற்கான அத்திவாரத்தைப் போடுகிறார்கள்.

மலையகத்தில் வாழும் இளைஞர்களின் இயக்கங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவை தேசிய மக்கள் சக்தியின் அதிகாரிகளுக்கு ஏற்ப இல்லாமல் ஆக்கப்பட்டும், ஹட்டன் பகுதியில் அமைக்கப்பட்டும் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

ஜனாதிபதி, தேரர்களின் பேரணி விவகாரம் சூடுபிடிக்கும் நிலையில், இதிலிருந்து பார்க்கும்பொழுது, ஜனாதிபதி “நாட்டை இனவாதமற்ற நாடாக அறிவித்தால் மாத்திரமே அனைவரும் சமம்” எனும் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளலாம் என்றார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments