தற்போதைய அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களை கண்டு அஞ்சுவதாக மருத்துவரும் சமூகச் செயற்பாட்டாளருமான உதயசீலன் கற்கண்டு தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழ் நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “புலம்பெயர் தமிழர்கள் அவரவர் நாடுகளில் உள்ள தூதரங்கங்களின் ஊடாக தமிழ் மக்களின் இந்த விசாரணைகள் குறித்து தமது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.

காரணம், பொருளாதார ரீதியிலும் கட்டமைப்பின் அடிப்படையிலும் புலம்பெயர் தமிழர்களின் பலம் யானையின் பலம்.

சட்டம் மூலமாக தமிழ்களுக்கான விசாரணைகள் மற்றும் தீர்வுகளை காணுவதை விட புலம்பெயல் ராஜதந்திரிகள் ஊடாக நகர்ந்தால் மாத்திரமே நீதி கிடைக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய செம்மணி விசாரணை, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது கீழுள்ள காணொளி,

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments