வாழ்வதற்குத் தேவைப்படும் துணிச்சல், சாவதில் இல்லை
மட்டக்களப்பு பகுதியில் 14 வயது மாணவி (இளம் பெண்) ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட செய்தி பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
இன்றைக்கு உங்களை வாட்டும் எந்தவொரு பிரச்சனையும் நிரந்தரமானது அல்ல. அது நாளைக்கு நிச்சயம் மறைந்துபோகும்.
உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
உங்கள் மனதை ஏதோ ஒரு பிரச்சனை பாரமாக அழுத்தும்போது, தயவுசெய்து உங்களுக்கு நெருக்கமான யாராவது ஒருவரிடம் மனம்திறந்து பேசுங்கள்.
அவர் உங்கள் ஆசிரியராக இருக்கலாம், அதிபராக இருக்கலாம், பெற்றோர், அல்லது உங்கள் நம்பிக்கைக்குரிய நெருங்கிய தோழியாக இருக்கலாம்.
உங்கள் தனிப்பட்ட விஷயத்தைப் பகிர்ந்தால் நிச்சயம் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நீங்கள் யாரை நம்புகிறீர்களோ, அவரிடம் தயங்காமல் பேசுங்கள்.
இறப்பதில் இருக்கும் துணிச்சல், ஒருபோதும் வாழ்வதில் இருக்கப் போவதில்லை. வாழ்க்கையை எதிர்கொள்வதே உண்மையான தைரியம்
உங்களுக்கு எந்தவொரு வழியும் தெரியவில்லை, யாருடனும் பேச முடியாது என்று தோன்றினால், தயங்காமல் உடனடியாக உதவி பெறுங்கள்
தேசிய மனநல உதவி எண் (இலங்கை): 1926
அல்லது உங்கள் பகுதி பொலிஸ் நிலையத்தைத் தொடர்புகொண்டு உதவி பெறுங்கள்.
உயிரிழந்த இளம் பெண்ணை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்.
அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
