குடும்பஸ்தர் ஒருவர் உ**யிரிழந்த நிலையில் மீட்பு.!பொகவந்தலாவை பகுதியில் உள்ள நீரோடை ஒன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் பொகவந்தலாவை, செப்பல்டன் தோட்டத்தில் வசித்து வந்த நாகராஜா என்ற 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
உயிரிழந்த நபர் நேற்று (30) இரவு பொகவந்தலாவை, மோரா தோட்டத்தில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் இறுதிக்கிரியை நிகழ்வில் கலந்துகொண்டு, நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வேளையில், கெசல்கமு ஓயாவிற்கு நீர் பாயும் இந்த நீரோடையில் விழுந்து குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
