வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்லும் சாரதிகளால் பாதிக்கப்படுவோருக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் வழங்கப்படும் நிதியுதவியை இரட்டிப்பாக அதிகரிக்க தேசிய வீதிப் பாதுகாப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, விபத்தில் உயிரிழப்போரின் தங்கிவாழ்வோருக்கு வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை 2 இலட்சத்து 50 ஆயிரத்திலிருந்து 5 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கடுமையான காயங்களுக்கு உள்ளாகும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச நிதியுதவி, 1 இலட்சத்து 50 ஆயிரத்திலிருந்து 3 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

நிதியுதவி

இந்த அதிகரிக்கப்பட்ட நிதியுதவித் திட்டம் 2026 ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

விபத்து இழப்பீட்டுத் தொகை இரட்டிப்பாக உயர்வு | Accident Compensation Amount Doubled

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் தேசிய வீதிப் பாதுகாப்புச் சபையினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ள 011-269 6890 அல்லது 011-268 7109 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments