கார்த்திகை மாதம்
வானம் அழுகிறது
மண் அழுகிறது
நாமும் அழுகிறோம்
போர் வீரர்கள்
விதையுண்ட மண்ணிலே
காந்தள் மலர்களும்
பூத்துக் குலுங்குகின்றன
எமக்காக தம்முயிரை
அர்ப்பணித்தவர் துயிலும்
கோயிலுக்கு நாங்கள்
வரப்போகிறோம்
மலர் மாலைகளோடு
தீபமேற்றி வழிபட வரப்போகிறோம்
கண்ணான கண்மணிகளே
நித்தமும்
எங்கள் நினைவுகளில் வாழ்பவரே
கடலோடும்,மண்ணோடும்
நீங்கள் கலந்துவிட்டீர்கள்
காலங்கள் ஓடுகிறது
நினைவுகளோ அங்கேதானே
உம்மைச் சுற்றி வட்டமிடுகின்றன
கார்த்திகைப் பூவிலும்
மாவீரர் சுடரிலும்
மிளிர்பவரே
ஒரு தரம் உங்கள்
விழிகளை திறந்து
தரிசனம் தந்தெம்மை பாரீரோ
நிம்மதி இழந்து
கண்ணீரில் வாடுகிறோம்
உயிர் மூச்சுள்ளவரை
உங்களை மறவோம் நாயகர்களே.
பிரபா அன்பு
