நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 43,827வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 16,822 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 9,661வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச1,489வாக்குகளைப் பெற்றுள்ளார். 

எவருக்கும் இடமில்லை...மாத்தறை தொகுதியில் பெரும் முன்னேற்றத்தில் அநுர | 2024 Sri Lanka Election Matara Results

திகாமடுல்லவில் முன்னிலை விகிப்பது இவர் தான்…தபால் வாக்கு முடிவுகள்!

முதலாம் இணைப்பு

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் மாத்தறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க19,712வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,088 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,041 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 543 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments