மட்டக்களப்பில் தனிமையில் இருந்த சுவிஸ் வாழ் இலங்கை பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

மட்டக்களப்பு – காத்தான்குடி, கல்லடி பகுதியில் தனிமையில் இருந்த பெண்ணொருவரின் வீட்டை உடைத்து பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்றையதினம் (20-11-2024) அதிகாலை 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் தனிமையில் இருந்த சுவிஸ் வாழ் இலங்கை பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! | Attack On A Swiss Woman Living Alone In Sri Lanka

சுவிஸில் இருந்து வருகைதந்திருந்த குறித்த பெண்ணின் வீட்டை உடைத்து உள்நுழைந்த நபர்கள், பெண்ணை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து 2 கோடி 40 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள், 1 1/4 பவுண் தங்க சங்கிலி மற்றும் 29,000 ரூபா  இலங்கை நாணயம் என்பவற்றை கொள்ளையிட்டு தப்பியோடியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பில் தனிமையில் இருந்த சுவிஸ் வாழ் இலங்கை பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! | Attack On A Swiss Woman Living Alone In Sri Lanka

கல்லடி பேபிசிங்கம் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய சுப்பையாபிள்ளை கோணேஸ்வரி 1990 ஆம் ஆண்டு குடும்பத்துடன் இடம்பெயர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டுக்குச் சென்ற குடியேறியுள்ளார்.

அங்கு அவர் தாதியாக பணியாற்றுவதோடு கணவன் பொறியலாளராகவும் மகள் விஞ்ஞானியாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் அவர் தாதி சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் இலங்கையில் உள்ள தனது வீட்டை பார்ப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்து வீட்டில் தற்காலிகமாக தனிமையில் தங்கியிருந்துள்ளார்.

மட்டக்களப்பில் தனிமையில் இருந்த சுவிஸ் வாழ் இலங்கை பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! | Attack On A Swiss Woman Living Alone In Sri Lanka

இந்நிலையில் இன்று வீட்டின் குளியலறை பகுதியில் யன்னல் கதவை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் குறித்த பெண்ணை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்த அலுமாரியை உடைத்து 72,000 ஸ்விஸ் பிராங் (இரண்டு கோடி 40 இலட்சம்) மற்றும் 1 1/4 பவுண் தங்க சங்கிலியும் 29,000 ரூபா பணத்தையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ.றஹீம் தலைமையில சென்ற பொலிஸார், தடயவியல் பிரிவு மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments