தாய்லாந்தின் (Thailand) புதிய பிரதமராக பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

முன்னாள் தாய்லாந்து பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் (Thaksin Shinawatra) மகளான 37 வயது பேடோங்டார்ன் ஃபியூ தாய் கட்சியின் தலைவர் ஆவர்.

இந்நிலையில், அவர் புதிய அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பார் என்றும் அதனைத் தொடர்ந்து, தற்போதைய அமைச்சர்கள் பதவி விலகுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமராகப் பதவி

இதற்கு முன்பு அக்கட்சியைச் சேர்ந்த ஸ்ரெத்தா தவிசின் தாய்லாந்தின் பிரதமராகப் பதவி வகித்தார்.

தாய்லாந்தில் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட 37 வயது இளம் பெண்  | Paetongtarn Thailand Youngest Prime Minister

சிறைக்கு அனுப்பப்பட்ட முன்னாள் வழக்கறிஞர் ஒருவருக்கு அமைச்சர் பதவியை வழங்கியதன் காரணமாக அவர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.  பிரதமர் பதவி ஏற்று ஓராண்டுகூட ஆகாத நிலையில் ஸ்‌ரெத்தா தமது பதவியை இழந்தார்.

இதை அடுத்து பேடோங்டார்ன் ஷினவத்ரா தாய்லாந்து அடுத்த பிரதமராகப் பதவி ஏற்க இருக்கிறார்.

பேடோங்டார்ன் ஷினவத்ராவின் அத்தையான யிங்லக் ஷினவத்ராவும் தாய்லாந்தின் பிரதமராகப் பதவி வகித்தவர்.  

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *