வவுனியா மாவட்டம், ஓமந்தையில் ரயில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி இன்றையதினம் (10-09-2024) மாலை சென்ற ரயிலானது புளியங்குளம் பகுதியை கடந்து ஓமந்தையை நோக்கி நகர்ந்த போது ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற பெண் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இச்சம்பவத்தில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த பெண் சுமார் 35-45 வயது மதிக்கத்தக்கவர் எனவும், இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *