யாழ்ப்பாணத்தில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கோவிற்சந்தை பகுதியில் சில மாதங்களுக்கு முன் மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிககப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கோமா நிலைக்கு சென்றமையினால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.