கொழும்பு, கெசல்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெக்னிகல் சந்தி பகுதியில் இன்று அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்கப்பட்ட பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 32 வயது எனவும், அவரது மேலதிக விபரங்கள் கண்டுபிடிக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தனிப்பட்ட தகராறு

இந்தப் பெண்ணுக்கும் மற்றுமொரு நபருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பில் அதிகாலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் பெண் | Women Killed In Colombo Today Police Investigation

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments