பிரான்ஸிற்கு செல்ல ஆசைப்பட்ட யாழ்ப்பாண இளைஞனுக்கு நேர்ந்த நிலை!பிரான்ஸிற்கு அனுப்புவதாக கூறி யாழைச் சேர்ந்த இளைஞன் ஒருவரிடம் 15 இலட்ச ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் நபரொருவர் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பாதிக்கப்பட்ட் இளைஞன் தெரிவிக்கையில்,!

பிரான்ஸிற்கு தன்னை அனுப்பி வைப்பதாக கூறி முதலில் 15 இலட்ச ரூபா பணத்தினை பெற்ற பின்னர், வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காது தன்னை ஏமாற்றி விட்டதாக இளைஞன் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றத்தில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த நபரை கடந்த 06-10-2024ஆம் திகதி கைது செய்தனர்.

பிரான்ஸிற்கு செல்ல ஆசைப்பட்ட யாழ்ப்பாண இளைஞனுக்கு நேர்ந்த நிலை! | Jaffna Youth Claiming To Send It To France Fraud

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நேற்று (07-10-2024) நீதிமன்றில் முற்படுத்தியபோது, இளைஞனிடம் பெற்றுக்கொண்ட பணத்தில் ஒரு தொகையை இன்று (08-10-2024) மீள கையளிப்பதாகவும், மிகுதி பணத்தினை மிக விரைவில் மீளளிப்பதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபரை பிணையில் செல்ல நீதிமன்றில் அனுமதித்துள்ளனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *