தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் “பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக! ” எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணக் காட்சியகம் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயம் முன்றலில் இன்று (20) மாலை 6.30 மணியளவில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஆவணக் காட்சியக நிகழ்வு

இதன்போது, தியாக தீபம் திலீபனின் பிரதான தூபி முன்றலில் மலரஞ்சலி செலுத்தி ஆரம்பமாகியதுடன் வரலாற்று ஆவணக் காட்சியகம் மாவீரர்களின் பெற்றோரால் சுடரேற்றி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆவணக் காட்சியகத்தில் தியாக தீபம் திலீபனின் வரலாற்று புகைப்படங்கள் என்பன தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். 

யாழில் தியாக தீபம் திலீபனின் ஆவணக் காட்சியகம் திறந்து வைப்பு | Thiaga Deepam Dileepan Documentary Gallery Jaffna

Gallery

GalleryGalleryGallery

GalleryGallery

GalleryGallery

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *