தமிழர் பகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல்மட்டக்களப்பு (batticala) – கல்குடா தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயானந்தமூர்த்தியின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
வாழைச்சேனையில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று (20.09.2024) இரவு சென்ற இனந்தெரியாத நபர்கள் அவரின் வீட்டின் மீது தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகைகளும் கிழிக்கப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல் நடவடிக்கையை மூவரடங்கிய குழுவினர் முன்னெடுத்ததாக தாக்குதலுக்குள்ளான ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பிள்ளையானின் ஆதரவாளர்
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தாக்குதலுக்குள்ளானவர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தே தன்மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
பிள்ளையானின் ஆதரவாளர்களே தன்னை தாக்கியிருக்ககூடும் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.