மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (12) பிற்பகல் குறித்த மூவரும் ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரியவருகிறது.
இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூன்று வயது குழந்தை காயமடைந்த நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மூவரும் களுத்துறை தெற்கு ரஜவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.