மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலையில் ஓந்தாச்சிமடம் பகுதியில் மோட்டார்சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் அமர்ந்து பயணித்த வெல்லாவெளி 39ம் கொலனியைச் சேர்ந்த 16வயதான வேனுசன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மோட்டார்சைக்கிளை செலுத்திச் சென்ற பெரியபோரதீவை சேர்ந்த இளைஞன் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஓந்தாச்சிமடத்தை சேர்ந்த சிறுவனுக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இவ் விபத்து பற்றி மேலும் தெரியவருவதாவது,
முச்சக்கரவண்டியில் களுவாஞ்சிகுடி நகருக்கு வருகை தந்திருந்த இரண்டு இளைஞர்களும் நகரில் நின்றிருந்த தனது நண்பனிடம் அவனது உயர்ரக மோட்டார்சைக்கிளை ஓடிப்பார்ப்பதற்காக வாங்கிக்கொண்டு மோட்டார்சைக்கிளை வேகமாக செலுத்திக்கொண்டு சென்ற நிலையில் ஓந்தாச்சிமடம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதிய போது மோட்டர்சைக்கிள் பயணித்தோர் தூக்கி எறியப்பட்டு பலத்த காயம் அடைந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிவேகமாக மோட்டார்சைக்கிளை செலுத்திச் சென்றதாலே இவ் விபத்து சம்பவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு