ஐரோப்பா எல்லைப் பகுதியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்.கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு வருடங்களுக்கு முன்னர் அரபு நாடு ஒன்றில் இருந்து ஐரோப்பா நாடுக்கு செல்ல முயற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

சிறு வயது முதல் தந்தையை இழந்த இளைஞர் உறவினர்கள் உதவியுடன் ஐரோப்பா நாட்டுக்கு செல்ல முயற்சியில் ஈடுபட்டுளள்ளார்.

இந்த நிலையில் நேற்றையதினம் (14-10-2024) 8 பேர் கொண்ட இளைஞர் குழு ஐரோப்பா ரசியா எல்லையை கடக்க முயற்சி செய்த நிலையில் குறித்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது.

இது கொலையா ? இயற்கை மரணமா? என்ற சந்தேகம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

ஐரோப்பா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாண இளைஞன்! கொலை என சந்தேகம்? | Youth From Jaffna Found Dead At Border Of Europe

குறித்த சம்பவத்தில் யாழ்.கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 25 வயதான எஸ்.ஜதுசன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர உறவினர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *