கனடாவாழ் புலம்பெயர் தமிழருக்கு சொந்தமான காணியின் அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனடா நாட்டில் வசிக்கும் நபர் ஒருவர், மானிப்பாய் பகுதியில் உள்ள தனது ஆதனங்கள் சிலவற்றுக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்தவருக்கு தனது அற்றோனித் தத்துவத்தை வழங்கி இருந்தார்.

கனடாவாழ் தமிழருக்கு யாழில் நடந்த சம்பவம்; புலம்பெயர் உறவுகளே அவதானம்! | Shocking For Canadian Diaspora Tamils Jaffna Land

ஆதனங்களை மோசடியாக உரிம மாற்றம்

குறித்த நபர் தனக்கு அற்றோனித் தத்துவத்தில் வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி மேலும் சில ஆதனங்களை மோசடியாக உரிம மாற்றம் செய்துள்ளார்.

இது தொடர்பில் கனடாவை சேர்ந்த நபர் யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து இருவரை கைது செய்துள்ளனர்.

கனடாவாழ் தமிழருக்கு யாழில் நடந்த சம்பவம்; புலம்பெயர் உறவுகளே அவதானம்! | Shocking For Canadian Diaspora Tamils Jaffna Land

கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் (16) நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , அவர்களை பிணையில் செல்ல மன்று அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீ ஷெல்ஸ் நாட்டின் புதிய சட்டமா அதிபராக இலங்கையர்!

அதேவேளை யாழில் காணி மோசடிகள் அதிகரித்துவரும் நிலையில், புலம்பெயர் உறவுகள் தமது அசையா சொத்துக்கள் தொடர்பில் மிகவும் அவதானமாயிருக்க வேண்டும். 

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *