ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) ஆட்சியின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) கூட கைது செய்யப்படலாம் என புலனாய்வுச் செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் (Nilamdeen) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மத்திய வங்கி ஊழல் விடயத்தில் அர்ஜுன் மகேந்திரன் (Arjun Mahendran) தொடர்பில் வெடித்த பாரிய போராட்டங்களை தடுத்து நிறுத்தியவர் ரணில்.

கைது நடவடிக்கைகள்

ரணிலிற்கு எதிராக அநுர செயற்படுவாரா என நோக்கும் போது, முன்னாள் அதிபர் என்ற பதுங்கள் கூட காணப்பட்டு அடுத்தடுத்தவர்கள் கைது செய்யப்படலாம்.

அத்தோடு, தவறான முறையில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் தவறான ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டவர்கள் என்பவர்களை அச்சம் சூழ்ந்துள்ளது.

நடைபெறவுள்ள பொது தேர்தலுக்கு முன்பாக ஏகப்பட்ட கைது நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற முன்னெடுப்புக்களும் இடம்பெறவுள்ளது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நியமிக்கப்பட்டுள்ள புதிய ஜனாதிபதியின் அடுத்தக்கட்ட நகர்வு மற்றும் ஆட்சி மாற்றம் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துக்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான ஊடறுப்பு,

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *