கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளங்குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிக்கி  யாழ்ப்பாணம் மயிலிட்டியை சொந்த இடமாகவும் மார்க்கம், ஒன்ராறியோவில்  வசித்து வந்த 44 வயதான என்பவரே உயிரிழந்துள்ளார்.

கனடாவில் பயங்கரம்; வீட்டு வாசலில் வைத்து யாழ் இளம் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை | A Young Family Shot Dead In Canada Ontario

 வீட்டு வாசலில் வைத்து துப்பாக்கிச்சூடு

கனடாவின் ஒன்ராறியோ மாநிலம் மார்க்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டு வாசலில் வைத்து நேற்று அதிகாலை (20) இனம்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது, மேற்படி நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிருக்கு போராடியுள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து வந்து பார்த்த போது குடும்பஸ்தர் உயிரிழந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *