முல்லைத்தீவில் நண்பியை தேடி சென்ற யுவதிக்கு இளைஞனால் நேர்ந்த கொடுமை!

முல்லைத்தீவு, மாமூலைப் பகுதியில் இளம் யுவதி ஒருவர் இளைஞன் ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,!

குறித்த யுவதி, அருகில் உள்ள வீடு ஒன்றிற்கு தனது நண்பியினை தேடி சென்ற போது நண்பியின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டில் தனிமையில் இளைஞன் ஒருவர் இருந்துள்ளார். 

இந்த நிலையில், அந்த இளைஞன் வீட்டிற்குள் வரசொல்லி யுவதியினை அழைத்துவிட்டு யுவதியினை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

இளைஞனிடமிருந்து தப்பி சென்ற யுவதி தனக்கு நடந்தவற்றை வெளியில் தெரியபடுத்தும் முன்னர் தவறான முடிவெடுக்க முயற்சித்த நிலையில் வீட்டாரால் காப்பாற்றப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் கொடுத்த வாய்முறைப்பாட்டிற்கு அமைய குறித்த இளைஞனை கைதுசெய்யும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவில் நண்பியை தேடி சென்ற யுவதிக்கு இளைஞனால் நேர்ந்த கொடூரம்! | Young Man Molested A Young Woman In Mullaitivu 

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *