மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital) சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் (22) குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். 

இதன்போது, முல்லைத்தீவு – வெலி ஓயா, கிரிபன்னா பகுதியைச் சேர்ந்த எஸ்.எல்.சம்பத்குமார – (வயது 21) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பு

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் கடந்த 20 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவேளை நாய் ஒன்று குறுக்கே சென்ற நிலையில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.

பின்னர் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மரண விசாரணை

இந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

இளைஞனுக்கு நாயால் நேர்ந்த கதி: யாழ்.வைத்தியசாலையில் பலியான பரிதாபம் | A Jaffna Youth Died In An Accident

உயிரிழந்த இளைஞனின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *