நாடாளுமன்ற தேர்தலுக்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு யாழ்ப்பாணம் (Jaffna) தந்தை செல்வா அரங்கில் இன்று (02.11.2024) இடம்பெற்றது.

எனினும் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில்யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் சிவஞானம் சீறிதரன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.

நிகழ்வில் கலந்துகொண்டோர் 

இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான எம்.ஏ சுமந்திரன், சி.வி.கே. சிவஞானம் உட்பட வேட்பாளர்களாக களமிறங்குவோர் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வெளியிடப்பட்ட தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்...புறக்கணித்த சிறீதரன் | Itak Election Manifesto Release Shritharan Neglect

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

இந்த நிலையில் சிறீதரன், எஸ்.சி.சி.இளங்கோவன், கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், இமானுவல் ஆர்னோல்ட், கிருஸ்ணவேணி சிறிதரன், தியாகராஜா பிரகாஷ் ஆகியோரும் யாழ். மாவட்ட வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

Gallery

GalleryGallery

GalleryGallery

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *