உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணையாக கருதப்படும் ஹ்வாசாங் 19 என்ற ஏவுகணையை வடகொரியா (North Korea) நேற்று (31) சோதனை செய்துள்ளது.
இதன் மூலம், மொத்த உலக நாடுகளும் உறைந்துபோய் உள்ளன. வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் (North Korea) இடையே கடும் மோதல் போக்கு உள்ள நிலையில் தென்கொரியாவுக்கு அமெரிக்கா உதவி செய்து வருகிறது.
இதனால் அமெரிக்காவுக்கும் (USA), வடகொரியாவுக்கும் இடையே நேரடி மோதல் தொடர்ந்து நிலவி வருகிறது.
மேலும், வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்கா உள்பட அதன் ஆதரவு நாடுகள் வடகொரியாவுடன் எந்த தொடர்பையும் தற்போது வரை வைத்திருக்கவில்லை.
இதனால் வடகொரியா அளவில் சிறிய நாடாக இருந்தாலும் கூட வல்லரசு நாடான அமெரிக்காவை தனது பரம எதிரியாக எதிர்த்து வருவதோடு அமெரிக்காவுக்கு தொடர்ந்து நேரடியாக வடகொரியா மிரட்டல் விடுத்து வருகிறது.
அமெரிக்காவை மிரட்டி பார்க்கும் வகையில் ஏவுகணை சோதனைகளையும் அவ்வப்போது வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் (Kim Jong Un) நிகழ்த்தி வருகிறார்.
இதற்கிடையே தான் சில நாட்களுக்கு முன்பு வடகொரியா எல்லையில் தென்கொரியாவுடன் சேர்ந்து அமெரிக்கா வான்வெளி தாக்குதல் தொடர்பான கூட்டு பயிற்சியை மேற்கொண்டது.
ஏவுகணை சோதனை
இதற்கிடையே தான் நேற்று வடகொரியாவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் வகை ஹ்வாசாங் – 19 என்று பெயரிட்டுள்ள ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை சோதனை தான் தற்போது அமெரிக்கா உள்பட மொத்த உலக நாடுகளையும் உறைய வைத்துள்ளது. ஏனென்றால் இந்த ஹ்வாசாங் – 19 எனும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அளவில் மிகப்பெரியதாக உள்ளது.-
வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உள்ளன. இந்த ஏவுகணைகள் 20 மீட்டர் நீளம் அதாவது 66 அடி நீளம் கொண்டதாகும்.
ஆனால் தற்போது வடகொரியாக சோதித்து பார்த்துள்ள ஹ்வாசாங் – 19 ஏவுகணை என்பது 28 மீட்டர் நீளம் கொண்டதாகும். அதாவது 92 அடி நீளம். மேலும் பொதுவாக ஏவுகணைகளில் திரவ வடிவில் தான் வெடிப்பொருட்கள் நிரப்பப்படும்.
ஆனால் தற்போதைய ஹ்வாசாங் 19 ஏவுகணையில் திட நிலையில் வெடிப்பொருட்களை நிரப்ப முடியும் என்பதோடு அதிக உயரத்தில், அதிக தூரம் சென்று தாக்கும் தன்மை கொண்டது.
ஜனாதிபதி கிம் ஜாங் உன்
அதோடு ரேடார் கண்காணிப்பில் இந்த ஏவுகணை சிக்காமல் நேரடியாக கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் திறனுடையதாக உள்ளது. நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட ஹ்வாசாங் – 19 ஏவுகணையில் எந்த வெடிப்பொருட்களும் நிரப்பப்படவில்லை.
இந்த ஏவுகணை கடலில் விழும்படியாக ஏவி சோதிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை சோதனையை ஜப்பான் உறுதி செய்துள்ளது.
இதுபற்றி ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜென் நகாடனி கூறுகையில், ‛‛வடகொரியா ஏவி சோதனை செய்துள்ள ஏவுகணை என்பது முற்றிலும் புதிதானது. இந்த ஏவுகணை சோதனை 86 நிமிடங்கள் நடந்துள்ளது.
வானில் 7 ஆயிரம் கிலோமீட்டர் (4,350 மீட்டர்) தொலைவில் பறந்துள்ளது. இது வடகொரியாவின் முந்தைய ஏவுகணைகளை விட அதிக உயரத்தில் பறந்து சோதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணையால் வடகொரியாவில் இருந்து அமெரிக்காவின் மையப்பகுதியை கூட தாக்க முடியும்” என கூறியுள்ளார். அதோடு வடகொரியாவின் இந்த செயலை கடுமையாக கண்டித்துள்ளார்.
மேலும் இந்த ஏவுகணை சோதனை பற்றி வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛இந்த ஏவுகணை பரிசோதனை என்பது எதிரிகளுக்கான எச்சரிக்கை தான்.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல்
சமீபத்தில் எங்களின் பிராந்தியத்தில் வடகொரியாவுக்கு எதிராக செயல்கள் நடக்கின்றன. இதனால் எங்கள் நாட்டை அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் இந்த இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.
இதன்மூலம் அமெரிக்கா, தென்கொரியாவுக்கு ஜனாதிபதி கிம் ஜாங் உன் மிரட்டல் விடுத்துள்ளார்.
அதோடு அமெரிக்காவில் நவம்பர் 5ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் வேளையில் வடகொரியா இந்த சோதனையை மேற்கொண்டுள்ளது.
இதனால் ஒருவேளை அமெரிக்கா – வடகொரியா இடையே மோதல் ஏற்பட்டால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.