யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியிலுள்ள ஆலயமொன்றில் வழிபட்டுக் கொண்டிருந்த குடும்பப் பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கொ

உடற்கூற்று பரிசோதனை

நவாலி வடக்கு மானிப்பாயினைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயே உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த குடும்பப் பெண் கடந்த ஆறாம் திகதி ஆனைக்கோட்டை மூத்த நயினார் ஆலய கொடித் தம்பத்துக்கு அருகில் நின்றவாறு முருகனை அழுத வண்ணம் வழிபாடாற்றிய நிலையில் திடீரென சுயநினைவற்று நிலத்தில் சரிந்துள்ளார்.

யாழில் மயங்கி விழுந்த பெண் திடீர் மரணம் ; உடற்கூற்று பரிசோதனையில் வெளியான உண்மை | The Sudden Death Woman Who Fainted In Jaffna

அவர் மயங்கியதாகக் கருதிய ஆலயத்தினர் நோயாளர் காவு வண்டிக்கு தகவல் அளித்துள்ளனர்.

அவர்கள் வந்து பரிசோதித்ததில் குறித்த பெண் ஏற்கெனவே உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

அதனையடுத்து சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனை செய்யப்பட்டது.

உடற்கூற்றுப் பரிசோதனையில் மாரடைப்புக் காரணமாகக் குறித்த பெண் உயிரிழந்திருப்பதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *