வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பப் பெண்… பொலிஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி!
புத்தளம், முந்தளம் – மஹமாஎலிய பகுதியில் வீடொன்றில் குடும்பப் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் மங்களஎலிய, மஹமாஎலிய பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டிருப்பதாக முந்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளம்பரத்தில் இராமர் பாலம்! இந்திய மக்களை கவர்ந்த வீடியோ
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மனைவிக்கு அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவன் கடுமையாக தாக்கியதில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும், வீட்டின் அறையில் பெண் கிடப்பதை அவரது பாட்டி பார்த்துள்ளார். மேலும், அந்த பெண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
பெண்ணின் தலை பகுதியில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும், கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உயிரிழந்த பெண்ணின் கணவர் தற்போது தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் அடையாள அட்டையை எடுத்துச் சென்றுள்ளதாகவும், கொலைச் சம்பவம் தொடர்பில் அவரைக் கைது செய்ய பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் முந்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் நீதவான் விசாரணைக்காக கொலை நடந்த இடத்திற்கு சென்ற புத்தளம் பதில் நீதவான் இந்திக தென்னகோன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை புத்தளம் ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடடுள்ளார்.