இலங்கையிலுள்ள (Sri lanka) புதிய அரசை ஏதொவொரு வகையில் தன்வசம் வைத்திருக்கும் முயற்சியில் மேற்குலக நாடுகள் ஈடுப்படுவது தெளிவாக தெரிக்கின்றது என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வெற்றிப்பெற்றதை இலங்கையின் வெற்றியாக பார்க்கப்படுகின்றது.

அமெரிக்கா இந்தியாவினூடாகவே (India) இலங்கையை கையாள பார்த்தது எனினும், இந்தியாவின் திட்டங்களில் முன்னேற்றம் இல்லாததால் அமெரிக்கா (Usa) தானே களத்தில் இறங்கியுள்ளது. இது இந்தியாவிற்கு சாதகமாக அமையாது.

மத்தள விமான நிலையம் , அதானியின் காற்றாலை திட்டம் போன்றவற்றை இலங்கை மெதுவாக கை விடப்படுவதை நோக்கும் போது இலங்கை ஏதோவொரு நிலைபாட்டை எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அறுகம் குடா விடயத்தில் அமெரிக்காவின் புலனாய்வுத்துறையை நம்பியிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது” என்றார்.

இது தொடர்பில் மேலும் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு….

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *