ஜனாதிபதி தேர்தலை விட நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் ஆதரவு பாரிய புரட்சியாக மாறியுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னிணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வட மாகாணத்தில் 5 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.

இலங்கையின் 10 அவது நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை தேசிய மக்கள் சக்தி பதிவு செய்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் அதனை தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, 

பல்வேறு பிரச்சாரங்களுக்கு மத்தியில் தேசிய மக்கள் சக்தியை நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்களித்த தமிழர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார தரப்பில் இருந்து வந்த உறுதி! | President Anura Kumara Assured The Tamils

தேசிய மக்கள் சக்தியின் மீது தமிழ் மக்கள் வைத்த நம்பிக்கையை பாதுகாத்து அதனை முன்னெடுத்துச் செல்லவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மேலும், மக்களின் நலனுக்காக அதனை பயன்படுத்தவும் எதிர்பார்த்துள்ள மக்கள் விடுதலை முன்னிணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments