‘ராஜ கோபுரம் எங்கள் தலைவன்’ என்ற பாடலானது தலைவர் பிரபாகரன் அவர்களை புகழும் முகமாகப் பாடப்பட்ட ஒரு பிரபல்யமான பாடல்.
தலைவர் பிரபாகரன் அடையாளப்படுத்தப்படும் இடங்களிலும், காட்சிகளிலும் இந்தப் பாடல் பின்னணியில் ஒலிக்கவிடப்படுவது ஒரு மரபாகவே இருந்துவருகின்றது.
அண்மையில் நடைபெற்றுமுடிந்த சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 6000 வாக்குகள் மாத்திரமே பெற்று தமிழ் மக்களால் புறம்தள்ளப்பட்ட நிலையில் ஒரு இலவச இணைப்பாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவான செல்வம் அடைக்கலநாதனை புகழ்ந்து ‘ராஜ கோபுரம்’ பாடலை அவரது ஆதரவாளர்கள் பாடியதானது, தற்பொழுது புலம்பெயர் மண்ணில மிகப் பெரிய கோபத்தை ஏற்படுத்திள்ளது.
தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகிவருபவரும், சிறிலங்கா அரசபடைகளினதும், இந்தியப் படைகளினதும் கூலிப்படையாகச் செயற்பட்ட ஒரு அமைப்பின் தலைவராகச் செயற்பட்டுவருபவருமான ஒருவரை தலைவர் பிரபாகரனாக நேரடியாக ஒப்பிட்டு அவரது ஆதரவாளர்களால் அந்தப் பாடல் பாடப்பட்டதும், சிரித்துக்கொண்டே அடைக்கலநாதன் அந்தப் புகழ்ச்சியை ஏற்றுக்கொண்டதும், புலம்பெயர் நாடுகளில் அதிக வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி வருகின்றது.