யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 610 குடும்பங்களை சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 20 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனைத்து முக அமைத்துவ பிரிவின் பிரதிபலிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் இதுவரை 34 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏழு வீடுகளும் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன.

பகுதி அளவில் சேதம் 

ஊர்காவல்துறை பிரதேச செயலர் பிரிவில் 111 குடும்பங்களை சேர்ந்த 475 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

யாழில் அதிக மழை வெள்ளத்தால் 610 குடும்பங்கள் பாதிப்பு | 610 Families Affected By Flood In Jaffna
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 10 குடும்பங்களை சேர்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் எட்டு வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தம் மற்றும் இடி மின்னல் தாக்கத்தால் 5 குடும்பங்களைச் சேர்ந்த 14பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது. தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஏழு குடும்பங்களை சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 174 குடும்பங்களை சேர்ந்த 641 பேர் வெள்ள அணுத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதம் டைந்துள்ளது.

வெள்ள அனர்த்தம் 

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 18 குடும்பங்களை சேர்ந்த 68 பேர் வெள்ள அர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 145 குடும்பங்களை சேர்ந்த 494 பேர் பலர அர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் அதிக மழை வெள்ளத்தால் 610 குடும்பங்கள் பாதிப்பு | 610 Families Affected By Flood In Jaffna

அது மாத்திரமன்றி, கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 14 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு கொண்டும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 103 குடும்பங்களை சேர்ந்த 424 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

குற்றத்தை நிரூபிக்க தவறிய வழக்கு: நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு

Gallery

Gallery

Gallery

Gallery

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *