ஈழத்தமிழர்களுக்கு கனடாவில் ஆதரவு: ஒன்டாரியோ எதிர்கட்சி பெருமிதம்

தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகயிருப்பது குறித்து பெருமிதம் கொள்வதாக கனடா (Canada) ஒன்டாரியோவின் உத்தியோகபூர்வ எதிர்கட்சியின் மரிட்ஸ் டைல்ஸ் (Marit Stiles) தெரிவித்துள்ளார்.

தமிழ்ஈழ தேசிய கொடி தினத்தை குறிக்கும் நிகழ்வு குறித்து விடுத்துள்ள செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இது தொடரிபில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“இன்று தமிழீழ தேசிய கொடி தினத்தில், ஒன்டாரியோவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் நாங்கள் தமிழ் சமூகத்தின் வரலாற்றையும் கலாசாரத்தையும் கௌரவிக்கின்றோம். 

தமிழ் சமூகம் 

இன்றைய நாள் தமிழனப்படுகொலை மற்றும் முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட தமிழ் மக்கள் பல தசாப்தங்களை அனுபவித்த வன்முறைகளை நினைவுகூரும் நாளாகும். இந்த அட்டூழியங்கள் நினைத்துப்பாக்கமுடியாத வலியையும் துயரத்தையும் ஏற்படுத்தின. 

ஈழத்தமிழர்களுக்கு கனடாவில் ஆதரவு: ஒன்டாரியோ எதிர்கட்சி பெருமிதம் | Support Eelam Tamils Canadian Ontario Opposition

அதேவேளை, இது தமிழ் சமூகத்தின் உறுதிப்பாட்டையும், வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளது. தமிழ் சமூகம் நீதி மற்றும் மனித உரிமைகளிற்கான போராட்டத்திற்கான உத்வேகத்தை அளிக்கின்ற ஒரு சமூகம்.

தமிழர் படுகொலை 

புதிய ஜனநாயக கட்சியினராகிய நாங்கள் தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகயிருப்பது குறித்து பெருமிதம் கொள்கின்றோம், உங்கள் கலாசாரம் மீள் எழுந்தமை மற்றும் பங்களிப்புகள் எங்கள் மாகாணமான ஒன்டாரியோவை வளப்படுத்தி, எங்கள் அனைவருக்கும் சிறந்த இடமாக்குகின்றது.

ஈழத்தமிழர்களுக்கு கனடாவில் ஆதரவு: ஒன்டாரியோ எதிர்கட்சி பெருமிதம் | Support Eelam Tamils Canadian Ontario Opposition

இன்றைய நாளில் நாங்கள் செய்யப்பட்ட தியாகங்களை மீள நினைவுகூருவதுடன், நீதி சமாதானம் ஆகியவற்றிற்காக மீண்டும் அர்ப்பணித்துக்கொள்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *