S

அம்பாறை மாவட்டத்தில் காரைதீவில் உழவு இயந்திரம் இன்று வெள்ளத்தில் சிக்கியதில் உழவு இயந்திரத்தில் பயணித்த ​​7 பேர் மற்றும் 5 மாணவர்கள் காணாமல் போய்யுள்ளதுடன் இதில் இரண்டு மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் கார்த்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்போது அதில் 11 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

அம்பாறையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட உழவு வண்டி ; 5 மாணவர்கள் மாயம் | Plough Cart Swept Floodwaters 5 Students Missing

மத்ரசா பாடசாலை முடிந்து வந்த மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் சிக்கியுள்ளது. 

உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் உதவியாளரும் காணாமல் போயுள்ளதுடன், அவர்களை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளே இந்த விபத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments