யாழ் பல்கலைக்கழக்கத்தில் (University of Jaffna) மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (27) யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் தூபியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேஜர் விநோதரனின் (பாலசுந்தரம் அஜந்தன்) தாயார் பாலசுந்தரம் பொதுச்சுடரை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்துள்ளார்.
மாவீரர் நினைவேந்தல்
இதையடுத்து, ஏனையோர் ஈகைச் சுடர்களை ஏற்றி, மலர் தூவி உணர்வு ரீதியாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதில் மாவீரர்களின் உறவுகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.