Gallery

முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் இடைவிடாத கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

மாலை 06.05மணிக்கு மணி ஓசை எழுப்பப்பட்டு, தொடர்ந்து அகவணக்கம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

பிரதான பொதுச்சுடர் மாவீரர் மேஜர் பாலுவின் சகோதரியும், மாவீரர் லெப்ரினன்ட் பொன்னம்பலம் அவர்களின் மனைவியுமான கமலாதேவி அவர்களால் ஏற்றப்பட்டது.

அத்தோடு சமநேரத்தில் ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டதுடன், மாவீரர்களின் உறவுகள் கண்ணீர்சொரிந்து உணர்வெழுச்சியுடன் நினைவேந்தலை அனுஷ்டித்தனர்

மேலும் மாவீரர் துயிலுமில்லத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் மாவீரர்களின் உறவுகளுடன் இணைந்து உணர்வெழுச்சியுடன் மாவீரர்நாள் நினைவேந்தலில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


Gallery

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *